சென்னை: சென்னை மாநகராட்சி வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 9 மாமன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியின் வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023-ன்படிமாமன்ற உறுப்பினர்கள் சார்பில்9 உறுப்பினர்களை முன்மொழிந்தனர். அதை இதர மாமன்ற உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.
அதன்படி, ஏ.சந்திரன் (வார்டு-27), க.தேவி கதிரேசன் (வார்டு-39), ராஜேஷ் ஜெயின் (வார்டு-57), நா.உஷா (வார்டு-83), ம.கமல் (வார்டு-86), ஜெ.புஷ்பலதா (வார்டு-103), எம்.தரன் (வார்டு-140), வ.செல்வக்குமார் (வார்டு-154), அ.முருகேசன் (வார்டு-200) ஆகிய9 மாமன்ற உறுப்பினர்கள் மட்டும்வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், இவர்கள் 9 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
» காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
» இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ், 222 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி
வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் தேர்தல்நடத்தும் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago