விண்வெளி மையத்தைப் பார்வையிட ரஷ்யா செல்லும் மாணவர்களுக்கு நிதி உதவி: பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி வழங்கினார்

By செய்திப்பிரிவு

பல்லாவரம்: ரஷ்ய விண்வெளி மையத்தைப் பார்வையிட செல்லும் மாணவிகளுக்கு, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி நிதி உதவி வழங்கினார்.

கரோனா காலத்தில், முடங்கிக் கிடந்த அரசு பள்ளி மாணவர்களை, செறிவூட்டும் விதமாகவும், அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் விதமாகவும், ‘ராக்கெட் சைன்ஸ்’ என்ற தலைப்பில் ஆன்–லைன் பயிற்சி திட்டம், 2022-ம் ஆண்டு, ஜன. 26-ம் தேதி நடத்தப்பட்டது. விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தலைமையில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்க, தமிழகத்தில் உள்ள, 56 அரசு பள்ளிகளை சேர்ந்த, 500 மாணவர்கள் வாய்ப்பு பெற்றனர்.

அதில், 220 பேர் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், மாலை 5:30 முதல் 7:30 மணி வரை ஆன்-லைன் வகுப்பும், தொடர்ந்து கேள்வி நேரமும் நடத்தப்பட்டது. நிறைவாக, 50 பேர், தமிழக அரசின் ஆதரவுடன், வரும் ஆக. 9-ம் தேதி, ரஷ்ய நாட்டில் உள்ள ‘யூரி ககாரின்’ விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட செல்ல உள்ளனர்.

இவர்களில், தாம்பரம் மாநகராட்சி, ஜமீன் பல்லாவரம், நகராட்சி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ரோஹித், பிளஸ் 1 மாணவர் முகமது சதிக், 10-ம் வகுப்பு மாணவர்கள், லத்தாஷா ராஜ்குமார், இலக்கியா, லித்திகா, ரக் ஷித் ஆகிய ஆறு மாணவர்களும் அடங்குவர்.

ரஷ்யாவுக்கு செல்ல ஒவ்வொரு மாணவருக்கும், ரூ.2 லட்சம் செலவாகிறது. இதில், 2 மாணவர்களுக்கான செலவை அகத்தியம் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது.ஒரு மாணவருக்கு தனியார் நிறுவனமும், ஒரு மாணவருக்கு தமிழ் ஆர்வலர்களும் நன்கொடை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், 2 மாணவர்களுக்கு பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி, தனது சொந்த நிதியின் மூலம், ரூ. 4 லட்சத்தை நேற்று, நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், 2-வது மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, அறிவியல் பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்