93 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

By செய்திப்பிரிவு

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 93 தமிழக மீனவர்களையும் 117 படகுகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டது தொடர்பாக மீண்டும் ஒரு கடிதத்தை மிகுந்த வருத்தத்துடன் எழுதுகிறேன். நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 5 விசைப்படகுகள் மற்றும் இரு வள்ளங்களில் சென்ற 50 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த 22-ம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் 43 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் 50 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் முன்பு நடந்தபோது, தங்களது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக 225 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், திட்டமிட்டே அவர்களது 55 படகுகளை இலங்கை தரப்பினர் விடுவிக்காமல் உள்ளனர். இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மனிதாபிமானமற்ற முறையில் படகுகளை சிறைபிடிப்பதை கைவிட வேண்டும் என இலங்கை அரசிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 93 தமிழக மீனவர்களையும், அந்நாட்டின் வசமிருக்கும் 117 படகுகளையும் மீட்க உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்