சென்னை: முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க 47 மருத்துவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இடங்களை தேர்வு செய்துவிட்டு, சேராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் (50 சதவீதம் இடங்கள்) உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, நடப்பாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வுக்கும், மாநில கலந்தாய்வுக்கும் விண்ணப்பித்தவர்களில் கடந்த ஆண்டு இடங்கள் பெற்று கல்லூரிகளில் சேராதவர்கள் உள்ளனரா? என எம்சிசி தரப்பிலிருந்து தேசிய தேர்வு வாரியத்திடம் தகவல் கோரப்பட்டது. அதில் 47 பேர் அவ்வாறு உள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்கள் நடப்பாண்டில் கலந்தாய்வில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக இடங்களுக்கு விண்ணப்பித்த இருவர் குறித்த விவரங்கள் மாநில மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) வெளியிட்டுள்ள அறிவிப்பு: எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 27-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இன்று முதல் ஆக.1 நண்பகல் 12 மணி வரை பதிவு செய்யவேண்டும். ஆக.1 இரவு 8 மணி வரை கட்டணம் செலுத்தலாம். ஜூலை28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களை தேர்வு செய்யலாம்.
» கணவன் சொத்தில் மனைவிக்கு சமபங்கு - சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் தீர்மானம்
» மேகேதாட்டு அணை விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட ராமதாஸ் வலியுறுத்தல்
ஆக. 3, 4-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆக. 5-ம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் வெளியிடப்படும். ஆக.6-ம் தேதிசான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆக. 7 முதல் 13-க்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். ஆக.14 முதல் 16 வரை மாணவர்களின் விவரங்களை கல்வி நிறுவனங்கள் சரிப்பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆக.17-ம் தேதியும், 3-ம் சுற்று கலந்தாய்வு செப். 7-ம் தேதியும், இறுதியாக காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப். 28-ம் தேதியும் தொடங்கவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago