ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து உயர்வு: மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பும் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பிரதான அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியிலிருந்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் காலை அளவீட்டின்போது விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து அன்று மாலை முதல் படிப்படியாக உயரத் தொடங்கியது. கேரளா, கர்நாடகா மாநில வனப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகா மாநில அணைகளில் இருந்து காவிரியாற்றில் தமிழகத்தை நோக்கி உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அங்குள்ள அணைகளுக்கு வரும் நீர்வரத்து மற்றும் அணைகளின் நீர் இருப்பு நிலவரத்துக்கு ஏற்ப காவிரியாற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் நேற்று முன்தினம் மாலை தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு வந்து சேர்ந்தது. அன்று இரவு 9 மணியளவில் விநாடிக்கு 5,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்திருந்தது. அதேபோல, நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 6,000 கனஅடியாக நீர்வரத்து கூடியது. மேலும், நேற்று மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இந்த நீர்வரத்து உயர்வு காரணமாக ஒகேனக்கல் பிரதான அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டத் தொடங்கியுள்ளது.

மேட்டூரில் நீர் திறப்பு அதிகரிப்பு: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர், மேட்டூர் அருகே அடிப்பாலாறுக்கு நேற்று வந்து சேர்ந்தது. இதை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே, அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 119 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 177 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது, டெல்டா மாவட்டங்களில் பாசனநீர் தேவை அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து நேற்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுஉள்ளது.

சரியும் நீர்மட்டம்: அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நீர்மட்டம் 65.80 அடியாகவும், நீர் இருப்பு 29.19 டிஎம்சியாகவும் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்