சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை,சமூகவியல் முதுநிலை 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மாணவர்கள் அரசியல் கட்சிகள் சார்ந்த எந்தவொரு அமைப்பு மற்றும் சங்கங்களில் உறுப்பினராக இருக்கக் கூடாது எனவும், அப்படி மாணவர்கள் ஈடுபட்டால், உடனே கல்வி பெறும் வாய்ப்பிலிருந்து நீக்கலாம் என துறைத் தலைவருக்கு அதிகாரமளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மதிக்காமல் செயல்பட்டு, இச்சுற்றறிக்கையை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், சுற்றறிக்கையை திரும்பப் பெறவும் சென்னை பல்கலைக் கழக துணைவேந்தரை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago