சென்னை: பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, ரயில்களில் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், 8 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன் விவரம்: சென்னை சென்ட்ரல்-கோவைக்கு இயக்கப்படும் சேரன் அதிவிரைவு ரயில் (எண்: 12673) காட்பாடி ரயில் நிலையத்தை இரவு 11.48 மணிக்குப் பதிலாக, இரவு 11.53 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அதிகாலை 1.03 மணிக்குப் பதிலாக, அதிகாலை 1.13 மணிக்கு சென்றடையும். இந்த நேர மாற்றம் வரும் ஆக. 13-ம் தேதி அமலுக்கு வர உள்ளது.
மேல்மருவத்தூர்-விழுப்புரத்துக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில் (06725) காலை 11.30 மணிக்கு பதிலாக,11.45 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் விழுப்புரம் சந்திப்பை மதியம் 1.15 மணிக்குப் பதிலாக, மதியம் 1.20 மணிக்கு சென்றடையும். இந்த நேர மாற்றம் ஆக. 14-ம் தேதிமுதல் அமலுக்கு வரவுள்ளது.
அரக்கோணம் - வேலூர் இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் (06735) மதியம் 2.05 மணிக்குப் பதிலாக, மதியம் 2.40 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் வேலூர் கன்டோன்மென்ட்டை மாலை 4.35 மணிக்குப் பதிலாக, மாலை 4.50 மணிக்கு சென்றடையும். இந்த நேரம் மாற்றம் ஆக. 14-ம் தேதி அமலுக்கு வருகிறது.
புதுடெல்லி - புதுச்சேரிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (22404 )சென்னை எழும்பூரை காலை 9.30 மணிக்குப் பதிலாக, காலை 9.40 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் புதுச்சேரியை மதியம் 1.15 மணிக்குப் பதிலாக, மதியம் 1.20 மணிக்கு சென்றடையும். இந்த நேர மாற்றம் ஆக. 13-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதுதவிர 4 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago