கூட்டுறவுத் துறை ஊழியர்கள் ஒருநாள் விடுப்புப் போராட்டம் - மதுரையில் வெறிச்சோடிய அலுவலகங்கள்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் ஒருநாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரையில் அலுவலகங்கள் பணியாளர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் நிலையில், 40 சதவீத காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கூட்டுறவுத் துறை ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் ஒருநாள் விடுப்பு போராட்டம் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 75 சதவீதப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மதுரை மாவட்டத்தில் சுமார் 95 சதவீதம் பேர் பணிக்கு வராததால் சொக்கிகுளம், மேலமாசி வீதி, பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE