கும்பகோணம் | மொஹரம் பண்டிகைக்காக 4 நாள்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: மொஹரம் பண்டிகையையொட்டி நாளை முதல் 4 நாள்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சனி, ஞாயிறு வார விடுமுறை, மொஹரம் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி...

கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 150 பேருந்துகளும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 பேருந்துகள் என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள்
நாளை மற்றும் நாளை மறுநாள் இயக்கப்படவுள்ளன.

இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல ஜூலை 30, 31-ம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிற தடங்களில் 100 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தைச் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்து வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE