திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையில் இயக்கப்படும் 70 வாகனங்களுக்கு ஜி.பி.ஆர்.எஸ் கருவியை பொருத்தும் பணி தொடங்கியது.
ஊரக வளர்ச்சி முகமை தலைவராக உள்ள ஆட்சியர், திட்ட இயக்குநர் (கூடுதல் ஆட்சியர்), ஊராட்சிகளின் உதவி இயக்குநர், செயற்பொறியாளர், உதவி செயற் பொறியாளர், உதவி பொறியாளர் (தணிக்கை), வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய குழு தலைவருக்கு ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வாகனம் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் நல திட்டங்களை ஆய்வு செய்தல் மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வாகனங்களை தமிழக அரசு வழங்கிஉள்ளன.
மக்களின் வரி பணத்தில் இருந்து வாங்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை ஒரு சில அதிகாரிகள் மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்கு அதிகளவில் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அரசாங்கத்தின் குறியீடுகளை கடந்து டீசல் பயன்படுத்தப்படுகிறது.
தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே வாகனங்களை இயக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுமதி உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் உள்ளே நடைபெறும் அரசு விழாக் களுக்கு கொண்டு செல்லலாம். ஆனால் ஒரு சிலர், மாவட்ட எல்லையை கடந்து சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அரசு வழங்கிய வாகனங்களை கொண்டு சென்று பயன்படுத்துகின்றனர்.
அரசு ஓட்டுநர்கள் வர மறுத்தால், தங்களது தெரிந்த ஓட்டுநர்கள் (வெளி நபர்கள்) மூலமாக வாகனங்களை கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது அரசு வாகனங்கள் விபத்தில் சிக்கினால், அரசு ஓட்டுநர்களின் பணிக்கு ஆபத்து ஏற்படுகிறது. மேலும், ஒன்றிய குழு தலைவர்கள் சிலர், தங்களது வீடுகளில் வாகனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.
அரசு விதிகளை ஓட்டுநர்கள் எடுத்து கூறினாலும், ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட அரசு ஓட்டுநர்கள், இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி முகமையின் தலைமையகத்துக்கு சங்கம் மூலமாக வலியுறுத்தப்பட்டன.
இதன் எதிரொலியாக, ஊரக வளர்ச்சி முகமை மூலமாக இயக்கப்படும் வாகனங்களுக்கு ஜி.பி.ஆர்.எஸ் எனும் கண்காணிப்பு கருவியை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளன. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையில் இயக்கப்படும் சுமார் 70 வாகனங்களுக்கு ஜி.பி.ஆர்.எஸ் கருவியை பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.
சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்தும் வாகனங்கள் செல்லும் வழித்தடங்களை எளிதாக கண்காணிக்கலாம். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இப்பணி இன்றும், நாளையும் நடைபெறவுள்ளன.
இதன் மூலம் சொந்த தேவைக்கு அரசு வாகனங்களை இயக்குவது தடுக்க முடியும் என அரசு ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அரசு வாகனங்களை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள் மற்றும் ஒன்றிய குழு தலைவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 min ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago