சென்னை: தமிழகத்தில் 110 வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருவாய்த் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, வருவாய்த் துறையில் கடந்த 2004 முதல் 2019-ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது வட்டாட்சியர்களாக பணிபுரியும் 110 பேருக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2022-ம் ஆண்டு வரை துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களுக்கான ஆணைகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
18 hours ago