சென்னை: சென்னை எண்ணூர் முதல் கோவளம் வரையுள்ள கடற்கரை பகுதியில், கடற்கரை மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர்ப்பு பெறுதல் திட்டத்தை தமிழக அரசு ரத்துசெய்து, மீனவர்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி நேற்று மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளர் சங்கம் சார்பில் நொச்சிக்குப்பத்தில் தொடங்கிய பிரச்சார இயக்கம், டுமீங்குப்பம், முள்ளிக்குப்பம், பட்டினப்பாக்கம், ஊரூர்ஆல்காட்டுக்குப்பம், ஓடைக்குப்பம், திருவான்மியூர் வழியாக சென்று, பெரிய நீலாங்கரையை அடைந்தது.
பிரச்சார இயக்கத்தை தமிழ்நாடுமீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர்எஸ்.அந்தோணி தொடங்கிவைத்தார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலர் பா.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஜே.அன்புரோஸ், செயலர் எஸ்.ஜெயசங்கரன் ஆகியோர் பேசினர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சுற்றுலாவை மையப்படுத்தி எண்ணூர் முதல் கோவளம் வரையுள்ள கடற்கரைப் பகுதியில், சென்னை கடற்கரை மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர்ப்பு பெறுதல் திட்டத்தை தமிழக அரசு ரூ.100 கோடி மதிப்பில் அறிவித்துள்ளது. இதற்காக தனி நிறுவனம் ஏற்படுத்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் பகுதியில் பூங்காக்கள் அமைப்பது, நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை சிமென்ட் சாலை அமைப்பது, சாலை விரிவாக்கம், பட்டினப்பாக்கத்தில் வணிக வளாகம் அமைப்பது, சீனிவாசபுரம் முதல் ஆல்காட் ஊரூர் குப்பம், ஓடைமாநகர் வழியாக கொட்டிவாக்கம் வரை ரோப்கார் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட உள்ள இந்த திட்டங்களால், பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, சென்னை கடற்கரை மறுசீரமைப்புத் திட்டம் குறித்து மீனவ கிராமப் பிரதிநிதிகள், மீனவர் சங்கங்களுடன் தமிழக அரசு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். மீனவர் நல வாரியத்தில் 55 வயது கடந்த பெண்களுக்கும், 60 வயது கடந்த ஆண்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago