தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, தேனி மாவட்டங்களில் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வறட்சியால் சின்ன வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் பட்டறையில் சேமித்து வைத்திருந்த சின்ன வெங்காயம், வெளி மாநில வெங்காயத்தை கொண்டு வந்து சில மாதங்களுக்கு முன்பு வெளி மார்க்கெட்டில் கிலோ விலை ரூ.100 வரை விற்பனை செய்தனர்.
திண்டுக்கல் வெங்காய கமிஷன் மண்டிக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் தலா 4 ஆயிரம் சின்ன வெங்காய மூட்டைகள் வந்து இறங்கும். கடந்த 2 ஆண்டுகளாக, வறட்சியால் வரத்து பாதியாக குறைந்தது. சில மாதங்களாக வரத்து மேலும் குறைந்து, ஆயிரம் மூட்டை வெங்காயம் மட்டுமே வந்தது.
தற்பொழுது சில நாட்களாக சின்ன வெங்காயம் வரத்து 700 மூட்டைகளாக குறைந்தது. இதனால் விலை படிப்படியாக உயர்ந்து, தற்போது மொத்த மார்க்கெட்டிலேயே ரூ.150 முதல் ரூ.160 வரை விற்கிறது. இதை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் போக்குவரத்து செலவு, லாபம் என கணக்கிட்டு கிலோ ரூ.180 வரை விற்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி பாத்திமா ராஜரத்தினம் கூறியதாவது: குறைந்தபட்சம் கிலோ ரூ.130-க்கு விதை வெங்காயம் வாங்கி நடவு செய்து உரமிட்டு தண்ணீர் பாய்ச்சி 3 மாதம் கழித்து அறுவடைக்கு வரும்போது, வெங்காய விலை அதிகமாக இருக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை.
தெரிந்தே நஷ்டப்பட தயார் இல்லாததால் விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.
‘கடந்த 40 ஆண்டுகளில் இதுபோன்ற விலை உயர்வை பார்த்ததில்லை. தை மாதம் வரை விலை குறைய வாய்ப்பில்லை. வரத்து மேலும் குறையும் பட்சத்தில் கிலோ ரூ.200-ஐ தொட வாய்ப்புள்ளது’ என்று வியாபாரிகள் கூறினர். இந்நிலையில், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சென்னையில் கூறியது: விலையை குறைக்க கூடுதலாக கொள்முதலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். சின்ன வெங்காயத்தை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய ஆலோசிக்கப்படுகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago