முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தாயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். உணவு ஒவ்வாமையால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தயாளு அம்மாளுக்கு அங்கு விரிவான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தயாளு அம்மாளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட விவரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சென்னை ஆரியபுரத்தில் நடந்த முத்தமிழ்ப் பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து நேரடியாக, அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகைதந்து, தனது தாயாருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்