சென்னை: ராணுவம், கடற்படை, விமானப் படை, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தின் கீழ் உள் புகார் குழுக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள விமானப்படை கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த பயிற்சி வகுப்புக்கு வந்த விமானப் படை பெண் அதிகாரியை, சக அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக, உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் விமானப் படையின் ராணுவ நீதிமன்றம், விசாரணையை துவங்கியது. இந்த விசாரணையில் திருப்தியளிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விமானப் படைச் சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவரை தங்கள் வசம் ஒப்படைக்க கோரி, விமானப் படை கல்லூரி கமாண்டண்ட் தாக்கல் செய்த மனுவை ஏற்ற கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை ஒப்படைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து கோவை அனைத்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, விமான படைச் சட்டம், குற்ற விசாரணை முறை சட்டப் பிரிவுகளையும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், போலீஸார் விசாரணையை தொடர அவசியமில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேவையில்லை என உத்தரவிட்டார்.
» மணிப்பூர் கொடூரம் | “ராஜஸ்தான் உணர்வுகளை புண்படுத்திவிட்டார் பிரதமர் மோடி” - அசோக் கெலாட் காட்டம்
» சூர்யாவின் ‘கங்குவா’ கிளிம்ப்ஸ் வீடியோ நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியீடு
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டங்கள் கொண்டு வரப்பட்டு, பாலியல் வன்கொடுமை ஏற்பட்டுள்ள நிலையில், விமானப் படை பெண் ஒருவர், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக போராட தைரியம் இல்லாவிட்டால், வேறு யாருக்கு இருக்கும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, ராணுவம், கடற்படை, விமானப் படைகளிலும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தின் கீழ் உள் புகார் குழுகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago