சென்னை: நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சரிடம், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை, ஐயப்பன்தாங்கல் பணிமனையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமை வகித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியின்போது இறந்தபணியாளர்களின் வாரிசுதாரர்கள் 27 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கினார். தொடர்ந்து ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன வசதிகொண்ட பணியாளர் ஓய்வு அறையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர்பேசும்போது, ``ஆலந்தூர் மெட்ரோ -வேளச்சேரி குருநானக் கல்லூரி இடையே எஸ்83 என்னும் சிறிய வகை பேருந்து வேறு வழித் தடத்தில்இயக்கப்படுகிறது. அதனை மீண்டும்பழைய வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், எம்18என் (நங்கநல்லூர் - கூடுவாஞ்சேரி), எம்1ஏ (நங்கநல்லூர் - திருவான்மியூர்), 45பி(முகலிவாக்கம் - அண்ணாசதுக்கம்), 26எம் (முகலிவாக்கம் - பிராட்வே), 154 (பட்டூர் - தியாகராயநகர்), 52ஜி (கவுல் பஜார் - கோயம்பேடு), எஸ்11 (ஆலந்தூர்- பல்லாவரம்) ஆகிய பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்களில் பேருந்துகளை மீண்டும்இயக்க வேண்டும்'' என்றார்.
» 70,000 பேருக்கு மத்திய அரசு பணி நியமன ஆணை: பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
» அர்ச்சகர்கள் விரும்பும்போது பதவி ஓய்வு பெறலாம் - ஆந்திர அரசு புதிய அரசாணை
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறும்போது, ``ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.1 கோடியை தொகுதிநிதியில் இருந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கியுள்ளார். விரைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும். விலைவாசி உயர்வு விஷயத்தில் கூட்டணியில் உள்ள பாஜகவைகண்டிக்காமல், இருப்பை காட்டிக்கொள்ள அதிமுக போராட்டம் நடத்துகிறது'' என்றார்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம், இணை மேலாண் இயக்குநர் க.குணசேகரன், தலைமை நிதி அலுவலர் சு.சசிகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், அண்ணாநகர் பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறையை வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் அ.வெற்றியழகன் நேற்று திறந்துவைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago