சென்னை: மணிப்பூர் விவகாரத்துக்கு பல்வேறுதரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், போராட்டம் நடைபெறுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் போலீஸ்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர்உயிரிழந்தனர். 1,000-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஏராளமானோர் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
இந்த நிலையில், கடந்த மே 4-ம்தேதி 2 பெண்களை ஆடைகளின்றிஅழைத்துச் சென்ற வன்முறை கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வீடியோ கடந்த 2 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் ஸ்டாலின்உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைமெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மெரினாவில் போராட்டக்காரர்கள் ஒன்றுகூட இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர்பாலம் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் காவல் ஆய்வாளர் தலைமையில் 4 உதவி ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 40 போலீஸார் கண்காணிப்பு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் விவகாரம், மத்திய அரசை கண்டித்து ஓர் அமைப்புசார்பில் மெரினாவில் நேற்று முன்தினம் மாலை செல்போன் டார்ச் லைட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 35-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago