புதுச்சேரி: மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமையைத் தொடர்ந்து மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசுக்கு எதிராக புதுச்சேரியில் நேற்று நகரெங்கும் போராட்டங்கள் நடந்தன.
மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங் களாக கலவரம் நீடித்து வருகிறது. அம்மாநிலத்தில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பழங்குடியினப்பெண்கள் இருவரை எதிர்த் தரப்பு கும்பல் கொடூரமான முறை யில் பாலியல் வன்கொடுமை செய்தது நாடெங்கும் அதிர்வ லையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் புதுச்சேரியில் காமராஜர் சிலை, நேரு வீதி சந்திப்பில் புதுவை தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் மறியலில் ஈடு பட்டனர். இதையடுத்து சுமார் 25 பேரை போலீஸார் கைது செய்து விடுவித்தனர்.
புதுச்சேரி அண்ணாசாலை, நேரு சாலை சந்திப்பு காமராஜர் சிலை அருகே இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்கத் தலைவர் சுதா சங்கரராமன் தலைமை வகித்தார். சங்கத்தின் புதுச்சேரி தலைவர் சத்தியா முன் னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மணிப்பூர் அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி னர்.
புதுவை ஏஐடியூசி உழைக்கும் பெண்கள் சார்பில் ஜென்மராக்கினி கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ஏஐ டியூசி மாநிலச் செயலாளர் ஹேமலதா, மார்க்கெட் சங்க பொறுப்பாளர் லதா தலைமை வகித்தனர். உழைக்கும் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர்கள் அமுதவல்லி, அமுதா ,வசந்தி, பைரவி, லலிதா, சாந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா கவுரவத் தலைவர் அபிஷேகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். சிபிஎம் கட்சியின் வக்கீல் சங்கம் சார்பில் சரவணன் தலைமையில் கடலூர் சாலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகளிர் காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை கொக்கு பார்க் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். மகளிர் காங்கிரஸ் தலைவி பஞ்ச காந்தி தலைமை தாங்கினார் மேலும் துணை தலைவிகள் ஜெயலட்சுமி, விஜி, நிஷா, பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தினர் திடீரெய சாலை மறியலில் ஈடுபட்டனர். கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீஸார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போகச் செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago