நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம்

By செய்திப்பிரிவு

சென்னை: நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பேரிடர் காலங்களில் உடனடியாக தக்க நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அம்மாவட்டத்திற்கு பதிலாக திருநெல்வேலி மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்