பணப்பலன், அகவிலைப்படி உயர்வு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்: போக்குவரத்து ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டத்தில், பணப்பலன், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கரோனா காலத்துக்கு முன்னதாக மாநகர போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கானகுறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் 3 ஆண்டுகளுக்கு மேலாகக் கூட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், போக்குவரத்துத் துறைச் செயலர்க.பணீந்திர ரெட்டியிடம் ஓய்வூதியர்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், 3 மாதங்களுக்கு ஒருமுறை குறைதீர்கூட்டத்தை நடத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அதன்படி, பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கான கோரிக்கை மனுக்கள் கடந்தவாரம் பெறப்பட்டன. தொடர்ந்து நேற்றைய தினமும் ஓய்வூதியர்கள் மற்றும் சங்கங்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர்நல அமைப்பு, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்புசங்கம் உள்ளிட்ட சங்கங்கள்,``பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் முழுமையான பணிக்காலத்தை கணக்கில் கொண்டு பணிக்கொடை வழங்க வேண்டும்.வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.தொழிலாளர் நீதிமன்றங்களில் பெறப்பட்ட தீர்ப்பின்படி பணப்பலன்கள் வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்களைப் போல பென்ஷன் புத்தகம், ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன்பாக பணிப் பதிவேட்டை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு, நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவற்றை வழங்கவேண்டும்'' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தன.

இவற்றில் தனது அதிகாரத்துக்கு உட்பட்டவற்றைப் பரிசீலிப்பதாக கூட்டத்தை நடத்திய மாநகர போக்குவரத்துக் கழக கணக்குப் பிரிவு முதுநிலை அதிகாரி உறுதியளித்தார். இது தவிர்த்து ஓய்வூதியர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றுக்குத் தீர்வு காணப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்