மதுரை: சமூக வலைதளத்தில் கடலோர காவல் படையை விமர்சித்து பதிவிட்டவருக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துள்ளது.
திண்டுக்கல் ராமராஜபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சமூக வலைதளத்தில், ‘தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படுவதை தடுக்காத கடலோர காவல்படை தமிழகத்தில் இருந்து வெளியேற வேண்டும்’ என பதிவிட்டார். இது தொடர்பாக விஜயகுமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விஜயகுமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “மனுதாரர் மாவோயிஸ்டு ஆதரவாளர் என அறியப்படுகிறது. எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் அளித்தால் விசாரணை பாதிப்பு ஏற்படும். மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார். வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago