தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு, தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கடந்த 2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.90 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 2006-ல் திமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக் கோரி அமலாக்கத் துறை சார்பில் கடந்த ஏப்.19-ம் தேதி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
» பிரேக் பிடிக்கவில்லை என கூறி குமரியில் அரசு பேருந்தை இயக்க மறுத்த ஓட்டுநர் சஸ்பெண்ட்
» பழநி கோயிலில் புதிய நடைமுறை - முடி காணிக்கை செலுத்தும் பக்தரின் படத்துடன் இலவச டிக்கெட்
அதில், அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது தமிழக அமைச்சராக இருக்கிறார். இதனால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும். எனவே, வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, இந்த வழக்கில் அமலாக்கத் துறையை சேர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி எம்.செல்வம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் ஆனந்த ராமகிருஷ்ணன், ஆனந்த மகேஸ்வரன் ஆகியோர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். இந்த வழக்கில் தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு துறைக்கு உதவுவதற்காக அமலாக்க துறையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
ஆனால், தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இதனை ஏற்க மறுத்தார். வழக்கு விசாரணை சுமார் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் அமலாக்கத் துறையின் உதவி தேவையில்லை என அவர் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செல்வம், வழக்கை ஆக.2-க்கு தள்ளிவைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago