ஜனவரியில்தான் ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார்: சத்திய நாராயணராவ் தகவல்

By எஸ்.ராஜா செல்லம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை ஜனவரியில் வெளியிடுவார் என, ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ் கெய்க்வாட் தெரிவித்தார்.

தருமபுரியில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள, நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ் கெய்க்வாட் இன்று (புதன்கிழமை) தருமபுரி வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "தன் ரசிகர்கள் மட்டுமன்றி அனைவரின் அன்புக்கும் உரியவராக நடிகர் ரஜினிகாந்த் உள்ளார். அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக நல்லதே செய்வார். டிசம்பர் மாதத்தில் அவரது பிறந்த நாளில் புதிய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட வாய்ப்பில்லை. ஆனால், ஜனவரியில் வெளியிடலாம். ரஜினி அரசியலுக்கு வந்தபின் தமிழக மக்கள் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ரஜினியுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போட்டோ ஷூட் நிகழ்ச்சி மீண்டும் ஜனவரியில் நடக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்