சென்னையில் திருமணம், ஆஸ்திரேலியாவில் விவாகரத்து: ரத்து செய்து குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெண் ரோஸியும், கர்நாடகாவைச் சேர்ந்த இந்து இளைஞர் கிருஷ்ணாவும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) படிப்பு நிமித்தமாக ஆஸ்திரேலியா சென்றபோது காதலித்து, 2006-ல்சென்னை வேப்பேரியில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு இருவரும் ஆஸ்திரேலியா சென்றனர். அங்கு கணவரும், அவரது வீட்டாரும் ரோஸியிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவரைக் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும், கிருஷ்ணா, விவாகரத்தான ஒரு பெண்ண்ணை இரண்டாவதாக திருமணம் செய்யவும்திட்டமிட்டிருப்பது ரோஸிக்கு தெரியவந்துள்ளது. அதையடுத்து, கிருஷ்ணாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ரோஸி புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், ஆஸ்திரேலியா போலீஸார் கிருஷ்ணா, அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மனைவியை விவாகரத்து செய்யும் வகையில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பெடரல் சர்க்யூட் நீதிமன்றத்தில் கிருஷ்ணா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிருஷ்ணாவுக்கு விவாகரத்து வழங்கி 2021-ல் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து செல்லாது என உத்தரவிடக் கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ரோஸி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை 3-வது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.ஜெயமங்கலம் முன்பாக விசாரணைக்கு வந்தது. ரோஸி சார்பில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். கிருஷ்ணா விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதில் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், ``இந்தியாவில் நடந்த திருமணம் தொடர்பாக, என்பதால், அது இந்து திருமண சட்டம் அல்லது சிறப்பு திருமண சட்டம் எதுவாக இருந்தாலும், இந்தியாவில்தான் வழக்கு தொடர முடியும். ஆஸ்திரேலியா நீதிமன்றம், ரோஸிக்கு எந்த சம்மனும் அனுப்பாமல் தீர்ப்பளித்துள்ளது. மனுதாரரின் கணவர், வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்ய முடிவுசெய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, ஆஸ்திரேலியா அடிலெய்டு பெடரல் சர்க்யூட் நீதிமன்றம் கிருஷ்ணாவுக்கு வழங்கிய விவாகரத்து உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அந்த நீதிமன்ற உத்தரவு செல்லாது'' எனத் தீர்ப்பளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்