சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்குகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்துவது தொடர்பாக வழக்கமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். இதன்படி இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஓ.பி.ரவீந்திரநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாளை (20.07.2023) புதுடெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (19.07.2023) மதியம் 03.00 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து ஆலோசிப்பதற்காக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பாக அழைப்பு விடுத்ததின் பேரில் நாடாளுமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு அஇஅதிமுக சார்பில் கழக மக்களவை தலைவராக நான் கலந்து கொள்ள உள்ளேன்" என்று அதில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago