மதுரை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் வழியில் நேர்ந்த சாலை விபத்தால் மதுரை அருகே திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை பெருங்குடி அருகிலுள்ள சின்ன உடைப்பு பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்தும், லாரியும் ஒன்றன்பின், ஒன்றாக அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் முன்னால் சென்ற லாரி கவிந்தது. அதன்மேல் பேருந்து ஏறி நின்றது. இவ்விபத்தில் 11 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக வலையங்குளம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுநகர், தூத்துக்குடியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை செல்வதற்காக நேற்று மாலை இதே சாலையில் மதுரை விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த நேரத்தில் இவ்விபத்து நேர்ந்தால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வழியை சீரமைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago