சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 3-ல் ரூ.1204.87 கோடியில் ரயில் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2, வழித்தடம் 3-ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1204.87 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1204.87 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் JICA நிதியுதவியின் ஒரு பகுதியாகும். இதற்கான ஏற்பு கடிதம் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு 02.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் கெல்லிஸ் என நான்கு சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் அயனாவரம், புரசைவாக்கம் ஆகிய இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் தி.அர்ஜூனன் (திட்டங்கள்) மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ராமன் கபில் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), இணை பொது மேலாளர் ரீபு டாமன் துபே (சுரங்கப்பாதை), மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்