வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் தோசைக்கல் கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

சாத்தூர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடு மண்ணால் செய்யப்பட்டதோசைக் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் வைப்பாற்றின் கரையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2021-ல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதில், இதுவரை சுமார் 3,500-க்கும் மேற்பட்ட பழங்காலப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

2-ம் கட்ட அகழாய்வுப் பணிகள், கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அகல் விளக்கு: கடந்த வாரம் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் ஆன சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகளும் அதனைத் தொடர்ந்து, ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், சுடு மண்ணால் செய்யப்பட்ட தோசைக் கல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது முன்னோர்கள் கூட்டமாக வாழ்ந்து வந்ததையும், அப்போது அவர்கள் தோசை சுடுவதற்காக சுடுமண்ணால் ஆன தோசைக்கல்லை பயன்படுத்தியதை அறிய முடிவதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வெம்பக்கோட்டை அகழாய்வில், தொடர்ந்து பல அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE