3 ‘வந்தே பாரத்’ ரயில்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு: தென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்உட்பட 3 வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்லவரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரயில்களில் சராசரி டிக்கெட் முன்பதிவு 100 சதவீதத்துக்கு மேல் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சென்னை சென்ட்ரல் - மைசூர்,சென்னை சென்ட்ரல் - கோவை,காசர்கோடு - திருவனந்தபுரம் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் இந்த ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரயில்களில் சராசரி டிக்கெட் முன்பதிவு 100 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது.

சென்னை சென்ட்ரல் - மைசூர்வந்தே பாரத் ரயிலில் 2 எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகள், 14ஏசி சேர் கார் பெட்டிகள் எனமொத்தம் 16 பெட்டிகள் உள்ளன. இவற்றில் 1,128 பேர் அமர்ந்து செல்ல முடியும். இந்த ரயிலில் எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகளில் சராசரி டிக்கெட் முன்பதிவு 140.57சதவீதமாகவும், சேர் கார் பெட்டிகளில் சராசரி டிக்கெட் முன்பதிவு 126.98 சதவீதமாகவும் உள்ளது.

சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகளில் 596 இடங்கள் உள்ளன. இதில் எக்ஸிகியூட்டிவ் பெட்டியில் சராசரி டிக்கெட் முன்பதிவு 108.91 சதவீதமாகவும், சேர் கார் பெட்டிகளில் சராசரி முன்பதிவு 109.51 சதவீதமாகவும் இருக்கிறது. மறுமார்க்கமாக, கோவை-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் பெட்டியில் சராசரி முன்பதிவு 104.49 சதவீதமாகவும், சேர் கார் பெட்டிகளில் சராசரி முன்பதிவு 105.93 சதவீதமாகவும் உள்ளது.

காசர்கோடு - திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் கார் பெட்டிகளில் சராசரிடிக்கெட் பதிவு 181.63 சதவீதமாகவும், சேர் கார் பெட்டிகளில் சராசரி டிக்கெட் முன்பதிவு 181.05சதவீதமாகவும் உள்ளது, திருவனந்தபுரம் - காசர்கோடுக்கு இயக்கப்படும் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டியில் சராசரிடிக்கெட் பதிவு 178.60 சதவீதமாகவும், சேர் கார் பெட்டியில் டிக்கெட் முன்பதிவு 174.04 சதவீதமாகவும் உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இந்த 3 வந்தேபாரத் ரயில்களுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதையடுத்து, கூடுதல் வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE