இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா ரோந்து கப்பலை இலங்கை கடற்படைக்கு இலவசமாக வழங்குவதற்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடல் எல்லையைப் பாதுகாக்க கடலோர காவல் படையினர் 20 ரோந்து கப்பல்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 1984-ம் ஆண்டு தயாராகி 1988-ம் ஆண்டு கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்ட வருணா கப்பலானது சுமார் 30 ஆண்டுகள் சிறப்பான சேவையாற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றது.
இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் கடல்சார் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை காட்டிவரும் ஈடுபாட்டுக்காக, அந்நாட்டு கடற்படையிடம் வருணா ரோந்து கப்பலை பரிசாக அளிக்கவுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், “இந்திய அரசிடம் இலங்கை அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்திய கடலோர காவல்படையினரால் பயன்படுத்தப்பட்ட வருணா ரோந்து கப்பலை இலங்கை கடற்படை நன்கொடையாக பெற்றுக் கொள்வது” என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கைக்கு இலவசமாக ரோந்து கப்பலை அளிப்பதற்கு தமிழக மீனவர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கூறியதாவது:
தனது சொந்த நாட்டு மீனவர்கள் மீதே தாக்குதல் நடத்துவதற்கு இலங்கை கடற்படைக்கு இலவசமாக ரோந்து கப்பலை வழங்கும் மத்திய அரசின் செயல் கடும் கண்டனத்துக்குரியது. இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகாயமடைந்து உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். எனவே, இலங்கைக்கு வருணா ரோந்து கப்பலை வழங்கக் கூடாது. அந்த கப்பலை தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்த வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago