ஆடி அமாவாசையால் மதுரையில் பூக்கள் விலை உயர்வு

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை ஒருங்கிணைந்த மலர் சந்தையில் ஆடி அமாவாசையால் மதுரை பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த மலர் சந்தை உள்ளது. இந்த சந்தை, தென் மாவட்டங்கள் முழுவதிலும் இருந்து வரக்கூடிய பூக்கள், இந்த சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. உள்ளூர் வியாபாரிகள் முதல் வெளிமாவட்ட வியாபாரிகள் இந்த சந்தையில் பூக்கள் வாங்க திரள்கின்றனர்.

முக்கிய விழாக்கள், முகூர்த்த நாட்களில் பூக்கள் விலை உயரும். கடந்த 2 ஆண்டாக மதுரை மல்லிகைப் பூ நிரந்தரமாகவே கிலோ ரூ.1000 முதல் ரூ.1,500 வரை விற்பனையாது. விழாக்களில் கிலோ ரூ.3 ஆயிரம் ரூ.4 ஆயிரம் வரை விற்பனைானது.

இந்நிலையில் கடந்த 2 மாதமாக மதுரை மல்லிகைப்பூ விலை குறைந்தது. கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனையானது. தற்போது மீண்டும் மதுரை மல்லிகை விலை உயர ஆரம்பித்துள்ளது. நேற்று கிலோ ரூ.500க்கு மதுரை மல்லிகை விற்பனையானது.

மாட்டுத்தாவணி மலர் சந்தை பூ வியாபாரி ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘மதுரை மல்லிகை பூவை தவிர மற்ற பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ கிலோ ரூ.40, முல்லைப்பூ ரூ.400, பட்டன் ரோஸ் ரூ.120, செண்டு மல்லிப்பூ ரூ.100, செவ்வந்தி ரூ.180 முதல் ரூ.200, அரளிப்பூ ரூ.200, மரிக்கொழுந்து ரூ.100 விற்பனையாகிறது. ஆடி அமாவாசை என்பதால் பூக்கள் உயர்ந்துள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE