கள்ளக்குறிச்சி: பத்திரப் பதிவு துறை 138 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்வதுடன் அரசு நிர்வாகத்துக்கு தேவையான நிதியைதிரட்டி தருவதில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து ஒளிவுமறைவற்ற சேவையை துரிதமாக செய்ய உதவுகிறது. இத்துறை நவீன மயமாக்கலுக்கு அடிகோலிட்டுள்ளது
தமிழ்நாட்டில் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்புள்ள விற்பனை ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதற்காக பதிவாளர் அலுவலகத்துக்கு வரும்போது, விற்பவரிடமிருந்தும் வாங்குபவரிடமிருந்தும் நிரந்தரக் கணக்கு எண் (பான் எண்) பெறப்படுகிறது. இந்த எண் இல்லாதவர்கள் வருமானவரி சட்டத்தின்படி படிவம் 60-ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
ரூ.30 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ளசொத்துகள் பரிவர்த்தனை செய்யப்படும்போது, விற்பவர், வாங்குபவர் பற்றிய விவரங்கள், அவர்களது ஆதார் எண் மற்றும் பான் எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற கூடுதல் விவரங்கள் ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் மூலமாக சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் விவரங்கள் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வருமான வரித்துறையின் இணய தளத்தில் அந்தந்த சார் - பதிவாளர்களால் பதிவேற்றம் செய்யப்படும்.
சமீப காலமாக சொத்தை விற்பனை செய்பவர், அதனை வாங்குபவர்களின் ஆதார் எண் பெறப்பட்டு, அவை அப்போதே உதய் (UIDAI) ஆதார் தரவுத்தளத்தில் சரிபார்க்கப்படுகின்றன. ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதால் பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு நிகழ் நேரத்திலேயே வழங்கும் ஏற்படுகளும் செய்யப்பட்டுள்ளன.
» சென்செக்ஸ் 529 புள்ளிகள் உயர்ந்து 66,500-ஐ கடந்தது!
» கைதுகளும் சோதனைகளும் நடக்க நடக்க உறுதியாகிறது பாஜகவின் தோல்வி: கே.எஸ்.அழகிரி
இந்த நடைமுறைகள் கள்ளக்குறிச்சி மாவட்ட சார் பதிவாளர் அலுவலங்களில் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லையென கூறப்படுகிறது. அதாவது ஆவண எழுத்தர்கள் எழுதிக் கொடுக்கும் பத்திரங்களில் வில்லங்கம் இருந்தாலும், அதை பதிவுசெய்வது, போலி ஆவணங்களைக் கொண்டு பத்திரப் பதிவு செய்வது, பாகப்பிரிவினை தொடர்பான சொத்துகளின் போது, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடம் இருந்து தடையின்மை சான்று பெறாமலேயே ஒருசாராருக்கு ஆதரவாக சொத்துகளை பதிவு செய்வது, அரசு நிலத்தை தனியார் பெயருக்கு பதிவு செய்வது போன்ற முறைகேடான செயல்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகங்களில் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், பொதுப்பணித்துறை அலுவலகத்தையே தனியார் ஒருவருக்கு பதிவு செய்த சம்பவத்தில் சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடததக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவாளர் அலுவலகம், எலவனாசூர்கோட்டை சார் பதிவாளர் அலுவலகம், சின்னசேலம் சார் பதிவாளர் அலுவலகம், உளுந்தூர்பேட்டை சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவண எழுத்தர்கள் தரும் ஆவணங்களை சரிபார்க்காமல் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக பதிவுதாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக எலவனாசூர்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவுசெய்யப்பட்டது தொடர்பாக சார் பதிவாளரையும் இணைத்து வழக்குத் தொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு ஆவண எழுத்தர்களும் ஒரு காரணமாகக் இருக்கக் கூடும் என்பதால், சார் பதிவாளர் அலுவலகங்களுக்குள் ஆவண எழுத்தர்கள் நுழைய தடை விதித்து, பத்திரப் பதிவுத்துறை கடந்த ஜூன் 25-ம் தேதி உத்தரவுப் பிறப்பித்தது.
இந்த உத்தரவை அனைத்து மாவட்டப் பதிவாளர்கள், இணை பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் அனைவரும் பின்பற்றி, ஆவண எழுத்தர்கள் அலுவலகத்தில் வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இதுதொடர்பாக உத்தரவு நகலை அலுவலக விளம்பரப் பதாகையில் பொதுமக்கள் பார்வையில் படும்படி ஓட்டவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் எந்தஅலுவலகத்திலும் அதன் நகல் ஒட்டப்படவில்லை. மாறாக ஆவண எழுத்தர்கள் வழக்கம்போல் பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு வந்து சென்ற வண்ணமே உள்ளனர்.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவாளர் ரூபியா பேகத்திடம் கேட்டபோது, “முறைகேடான பதிவுகள் குறித்த ஆவணங்ளின் எண் குறிப்பிட்டு தெரிவித்தால், அவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆவண எழுத்தர்கள் வரக் கூடாது. மீறி வருபவர்கள் கண்டறியப்பட்டால், இணை பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இவர் கூறிய அதே தினத்தில், அவரது அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள சார் பதிவாளர் அறையில் ஆவண எழுத்தர்கள் அமர்ந்து கொண்டு அலுவலர்களிடம் பதிவு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago