தமிழக அரசை அமலாக்கத் துறை மூலம் மத்திய பாஜக அரசு பயமுறுத்திப் பார்க்கிறது: அமைச்சர் கா.ராமச்சந்திரன்

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: தமிழக அரசை அமலாக்கத் துறை மூலம் மத்திய பாஜக அரசு பயமுறுத்திப் பார்க்கிறது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கருத்து தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் நடைபெற உள்ள கோடை விழாவில் பங்கேற்க சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று வந்துள்ளார். பின்னர் அவர், திருவண்ணாமலையில் உள்ள யாத்திரி நிவாஸ் மற்றும் ஹோட்டல் தமிழ்நாடு ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். விடுதி மற்றும் உணவகத்துக்கு வந்தவர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர், “தமிழ்நாடு உணவகத்துக்கு வந்தால் உணவு நன்றாக இருந்தது என பொதுமக்கள் கூற வேண்டும். அந்தளவுக்கு உணவு தரமாக இருக்க வேண்டும். தலைவாழை இலையில் உணவு வழங்க வேண்டும். உணவு தரமாக இருக்கிறது என கூறப்படும் நிலையில், உணவு பரிமாறுவது தாமதமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “திருவண்ணாமலையில் உள்ள யாத்திரி நிவாஸ் மற்றும் தமிழ்நாடு உணவக விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் தொலைகாட்சி மற்றும் குளிர்சாதன வசதி செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளன. தூய்மையான பெட்ஷிட் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. கம்பளி போன்ற போர்வைகளை வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவை தரமாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளேன்.

ஜவ்வாது மலையில் 20 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா மையம் அமைக்கும் பணி ஓராண்டில் நிறைவு பெறும். சுற்றுலாத் துறையில் காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் படகு குழாம் அமைக்கப்படும்.

உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்துவது என்பது மத்திய அரசு செய்யும் தவறு. தமிழக அரசை மத்திய பாஜக அரசு பயமுறுத்திப் பார்க்கிறது. மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கின்றனர். 40 தொகுதிகளில் ஓர் இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்