சென்னை: “பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதையும், தற்போது பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் கூட்டத்துக்கு முன்னதாக பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி இருப்பதையும் பொருத்திப் பார்க்க வேண்டி இருக்கிறது” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி. வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்று செய்திகள் வருகின்றன.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்கத் துறையின் வாயிலாக மிரட்டி ஆட்சியாளர்களைப் பணிய வைக்கலாம் என்று ஒன்றிய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை நடத்தி சர்ச்சையை உண்டாக்கிய ஒன்றிய அரசு தற்போது உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத் துறை மூலமாக நெருக்கடியை வழங்க முயற்சி செய்கிறது. தொடர்ச்சியாக அமலாக்கத் துறையை கைப்பாவையாக மாற்றி பாஜகவின் இருக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
2007-ல் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேட்டிற்காக 16 ஆண்டுகள் கழித்து இன்று பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் கூட்டம் நடைபெறும் தினத்தில் அமலாக்கத் துறை இந்தச் சோதனையை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதும், அதில் தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பெரும் பங்காற்றுவதும் பாஜகவை நிலைகுலைய வைத்துள்ளது என்பதின் வெளிப்பாடாகவே இன்றைய அமலாக்கத் துறையின் சோதனையைக் கருத வேண்டியுள்ளது.
» தருமபுரி ஆட்சியர் அலுவலகத்துக்கு பாடையுடன் வந்த கிராம மக்களால் பரபரப்பு
» திமுகவை உடைக்க வேண்டும் என்ற பாஜகவின் நினைப்பு கனவில்கூட நடக்காது: கே.பாலகிருஷ்ணன்
பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் கூட்டத்துக்கு முன்னதாக பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி இருப்பதையும் பொருத்திப் பார்க்க வேண்டி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதும் இதன் வாயிலாகத் தெளிவாகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago