சென்னை: நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி முதல்கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் முயற்சி பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வெற்றிகரமாக நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது விண்கலம் குறைந்தபட்சம் 173 கி.மீட்டர் தொலைவும், அதிகபட்சம் 41,762 கி.மீட்டர் தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சீரான வேகத்தில் புவியை வலம் வருகிறது. அடுத்த 2 வாரங்களுக்கு சந்திரயான்-3 புவி சுற்றுப்பாதையில்தான் சுற்றிவரும். அப்போது புவிக்கு அருகே விண்கலம் வருகையில் அதிலுள்ள இயந்திரங்கள் இயக்கப்பட்டு சுற்றுப்பாதை தூரம் படிப்படியாக உயர்த்தப்பட்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும். அதன்பிறகு சந்திரயான்-3 நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையே சுமார் 41 நாட்கள் பயணத்துக்கு பின்னர் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago