ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் சொந்த ஊருக்கு திரும்பினர்.
ராமேசுவரத்தைச் சேர்ந்த அந்தோணி பிரசாத், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழரசன், உதயகுமார், அகிலா ஆகிய 4 பேருக்குச் சொந்தமான விசைப் படகுகளில் தமிழக மீனவர்கள் 22 பேர் நெடுந்தீவு அருகே ஜுன் 21-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி இவர்களது 4 படகுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், மீனவர்கள் சந்தியா, தேவா, நடராஜன், நாகராஜன், ஜிப்ரா உட்பட விசைப்படகுகளிருந்த 22 மீனவர்களைக் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
» தருமபுரி | கார் பழகும் பயிற்சியின் போது தீப்பற்றி எரிந்து சேதமான கார்
» மதுரை | ரூ.50 கோடியில் சுற்றுலாத் தலமாகிறது வண்டியூர் கண்மாய்
பின்னர் மீனவர்கள் 22 பேரும் ஜுலை 5-ம் தேதி ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நீதிபதி அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
பறிமுதலான 4 படகுகளின் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் செப்.11 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கை நீதிபதி தள்ளிவைத்தார்.
விமானத்தில் வருகை: இந்நிலையில், விடுதலையான 22 மீனவர்களும் நேற்று முன்தினம் (ஜூலை 15) கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் 5 பேரை ராமேசுவரத்துக்கும், 17 மீனவர்களை ஜெகதாப்பட்டினத்துக்கும் தனித்தனி வாகனங்களில் மீன்வளத் துறை அதிகாரிகள் அழைத்து வந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 secs ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago