மோடி மீண்டும் வெற்றிபெறும்போது அரசியலை சுத்தப்படுத்தும் சூழல் உருவாகும்: அண்ணாமலை

By செய்திப்பிரிவு

மதுரை: 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறும்போது நாட்டில் அரசியலைச் சுத்தப்படுத்தும் சூழல் உருவாகும், என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

மதுரை திருநகரில் காமராஜர் மக்கள் கட்சி மாநிலப் பொதுக்குழு கூட்டம் மற்றும் காமராஜர் பொற்கால ஆட்சி சாதனை மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாநிலச் செயலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித் தார். கலை, இலக்கியப் பேரவை தலைவர் பாரி வரவேற்றார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. மலரை வெளியிட அதைப் பெற்றுக்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

நாம் கனவு காணும் அரசியல் மாறும். காமராஜரின் கனவு மலரும். காமராஜர் ஆட்சியில் தொழில் புரட்சி நடந்தது போல், மோடி ஆட்சியிலும் தொழில் புரட்சி நடக்கிறது. இந்தியா தொழில் நாடாக மாறுகிறது.

தென்மாநிலங்களில் இருந்து பாஜகவுக்கு அதிக எம்.பி.களைகொடுக்கிறோமா என்ற கேள்வி உள்ளது. இந்த முறை தமிழகத்திலிருந்து 39 எம்.பி.களை மக்களவைக்கு அனுப்பவேண்டும்.

2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறும்போது, நாட்டில் நாம் எதிர்பார்க்கும் உண்மையான அரசியல் மாற்றம் ஏற்படும். அரசியலைச் சுத்தப்படுத்தும் சூழல் உருவாகும். ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்