தமிழக ஆளுநரை கேரள ஆளுநர் பின்பற்றினால் வரவேற்போம்: இல.கணேசன்

By எஸ்.நீலவண்ணன்

தமிழக ஆளுநரைப் போல கேரள ஆளுநரும் மாநிலம் முழுவதும் உள்ள ஆளுநர்களும் பின்பற்றினால் வரவேற்போம் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான எம்.பி. இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான எம். பி. இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

தமிழகத்தில் பிரதமர் மோடி மீது நல்லெண்ணம் உருவாகியுள்ளது. தேச பக்தியுடனும் தெய்வீக பூமியாகவும் இருந்த தமிழகம் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருந்த சித்தாந்தங்கள் கை ஓங்கியிருந்தது. தற்போது முடிவை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. தேச பக்தியும் தெய்வீகமும் தற்போது மிளிரத் தொடங்கியுள்ளது.

கமல்ஹாசன் கூறிய இந்து தீவிரவாதம் என்ற வார்த்தை கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. இந்துவாக இருப்பவன் தீவிரவாதியாக இருக்கமாட்டான்.

தமிழகத்தில் ஆளுநரின் நடவடிக்கை நமக்குப் புதிதாக உள்ளது. கோவைக்குச் சென்று ஆய்வு செய்ததை அடுத்து மற்ற மாவட்டங்களுக்கும் செல்வதைப் பாராட்டுகிறேன். ஆளுநராக இருப்பவர்கள் மக்களைத் தொடர்பு கொள்வது நல்லது. ஜெயலலிதா மரணத்திற்குப் பின் நிலைகுலைந்து போய் தற்போது அரசு நிர்வாகம் ஒன்று சேர்ந்து செயல்படுவது வரவேற்கத்தக்கது. தமிழக ஆளுநரைப் போல மற்ற ஆளுநர்களும் குறிப்பாக கேரள ஆளுநரும் பின்பற்றினால் வரவேற்போம்.

ஆளுநரின் நடவடிக்கையை விஜயகாந்த் வரவேற்றதை வேறு கோணத்தில் பார்க்கக்கூடாது. இப்படிச் சொல்வதாலேயே கூட்டணி அமையாது. நல்லதைப் பாராட்டுவது தவறா?

கணவரைப் பார்க்க வந்த சசிகலா, சொத்துப் பரிமாற்றம் செய்தார் என்பது அம்பலமாதால்தான் வருமானவரித்துறை சோதனை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் விரைவாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவேண்டும். எகிப்து -சூடானுக்கு இடையே சுமார் 2060 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு தன்னை மன்னராக அறிவித்த இந்தியர், அந்த மன்னார்குடி கும்பல் போன்றவராக இருப்பார் என்று நினைக்கிறேன் என்றார்.

பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன், கோட்டப் பொறுப்பாளர் மனோகரன், தேசியப் பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் சுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்