பூந்தமல்லி: பூந்தமல்லியில் ஆக்கிரமிக்கப்பட்ட திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை நேற்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் பிரசித்திப் பெற்ற திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது, பழமையான இக்கோயிலுக்கு, பூந்தமல்லியில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி, 90 சென்ட் நிலம் அமைந்துள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.20 கோடி ஆகும்.
இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து, கட்டிடங்களை கட்டி வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு, கோயில் நிலத்தை விட்டு வெளியேற ஆக்கிரமிப்பாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
இதனை எதிர்த்து, ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவ்வழக்கு விசாரணையில், கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
» மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதி, திட்டம் துறைகள் ஒதுக்கீடு
» ராஜஸ்தானில் 1985-ல் வாங்கிய சொத்து வழக்கில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு
இதன் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு, கோயில் நிலத்தில் இருந்து வெளியேற அறிவுறுத்தியும், ஆக்கிரமிப்பாளர்கள் கோயில் நிலத்திலிருந்து வெளியேறவில்லை என தெரிகிறது.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை திருவள்ளூர் உதவி ஆணையர் சித்ராதேவி தலைமையில், பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் கோயில் செயல் அலுவலர் மாதவன் முன்னிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிக்கப்பட்ட கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு சீல் வைத்து, மின் இணைப்பை துண்டித்து, நிலத்தை மீட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago