தேமுதிக சார்பில் வரும் 23-ம் தேதி முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் அதற்கான விருப்ப மனுக்களை வரும் 23-ம் தேதி காலை 10.30 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை பிப்ரவரி 1-ம் தேதி மாலை 6 மணிக்குள் கட்சித் தலைமையகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.20 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளைக் கழக நிர்வாகிளும், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைய பாடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.20 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago