திடீர் டெல்லி பயணம்: ஜே.பி.நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்ற அண்ணாமலை, அங்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.

2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் நடைபயணம் அறிவித்துள்ள அண்ணாமலை, ராமேசுவரத்தில் வரும் 28-ம் தேதி அதை தொடங்குகிறார். இந்நிலையில், அண்ணாமலை நேற்று அதிகாலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். 5 நாள் பயணமாக டெல்லி சென்ற ஆளுநர் ரவி, நேற்றுமுன் தினம் இரவு சென்னை திரும்பினார்.

இந்நிலையில், அண்ணாமலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கிவைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா வர உள்ள நிலையில், நடைபயண தொடக்க விழாவுக்கு ஜே.பி.நட்டாவையும் அழைப்பதற்காக அண்ணாமலை டெல்லி சென்றதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் அடுத்த வாரம் தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் அரசியல் கட்சிகள் உரையாடல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள 4 பேர் கொண்ட குழுவை தேசிய பாஜக நியமித்துள்ளது. அந்தவகையில், ஆந்திர தேசிய செயற்குழு உறுப்பினர் வினுஷா ரெட்டி, உத்தரப்பிரதேச மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் புஷ்கர்
மிஸ்ரா, குஜராத் மாநில ஊடக பிரிவு பொறுப்பாளர் சத்யன் குலாப்கர் ஆகியோருடன் அண்ணாமலையும் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜே.பி.நட்டாவுடனான சந்திப்பில், தமிழக அரசியல் நிலவரம், ஆளுநர் மற்றும் முதல்வர் மோதல் விவகாரம், செந்தில் பாலாஜி விவகாரம் குறித்தும் அண்ணாமலை பேசியதாக பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

முதல்வருக்கு கருப்பு கொடி: டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பியஅண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக பாதயாத்திரை 168 நாட்கள் நடக்கவுள்ளது. முதல் நாளான 28-ம் தேதி ‘மோடி என்ன செய்தார்’ என்ற புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட உள்ளார்.

பெங்களூருவில் சிறிய கட்சிகளை ஆலோசனைக்காக அழைத்துள்ளனர். மேகேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடகம் உறுதியாக உள்ளது. எனவே, பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் முதல்வருக்கு கருப்பு சட்டை அணிந்து எதிப்பு தெரிவிப் போம். கருப்பு கொடி காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்