தீபாவளியை ஒட்டி நவ.10-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் முடிந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக, ரயில்களில் நவ.10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. குறிப்பாக, பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட முக்கிய ரயில்களில் முன்பதிவு அடுத்தடுத்து சில நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது.

நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை நவ.12-ம் தேதி வருகிறது. இதற்காக, சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயில்களில் பயணிக்க 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த வகையில், நவ.9-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது.

நேற்று நவ.10-ம் தேதிக்கான வெள்ளிக்கிழமை) டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிக்கான டிக்கெட்கள் சில நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் நீண்டது. இதைத் தொடர்ந்து, 3 அடுக்கு ஏசி, 2 அடுக்கு ஏசி, முதல் வகுப்பு ஏசி ஆகியவற்றில் அடுத்தடுத்து முன்பதிவு நடைபெற்றது.

முக்கிய ரயில்களில் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து, காத்திருப்பு பட்டியல் வந்ததால், மக்கள் ஏமாற்றமடைந்தனர். இன்று (ஜூலை 14) நவ.11-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 secs ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்