பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் தோல்வி அடைவார்: கே.பாலகிருஷ்ணன் கருத்து

By ஆ.நல்லசிவன்

பழநி: பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் நிச்சயம் தோல்வி அடைவார் என்று பழநியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பழநியில் பழனி கோயிலின் பாரம்பரியத்தை பாதுகாத்திட வேண்டும் என்றுகூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (ஜூலை 13) இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பழநி ஒன்றிய செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், நகர செயலாளர் கந்தசாமி, காங்கிரஸ், மதிமுக, விசிக, தமுமுகவினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆளுங்கட்சி போல் செயல்படுகிற தோற்றத்தை பாஜக உருவாக்க முயற்சிக்கிறது. பழநி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதோர் வரக்கூடாது என கூறி வருகின்றனர். வழிபாட்டு தலங்களை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் செல்லலாம்.

அங்கு இழிவுப்படுத்தும் செயலை தான் அனுமதிக்க முடியாது. எனவே மத அடிப்படையில் இதை ஒரு பிரச்சினையாக கொண்டுபோய் விடுவது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையே இருக்க கூடாது. அதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறுவது அநாகரிகமானது. புதுச்சேரியில் கோயில் சொத்துக்களை அபகரித்ததாக பாஜக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக அறநிலையத்துறை தான் கோயில் சொத்துகளை பாதுகாத்து வருகிறது. பழநி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சிப்காட் அமைக்க பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிப்காட் அமைந்தால் நாட்டின் உற்பத்தி உயரும். ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும். பழநியில் ஒரு பதற்றமான நிலையை உருவாக்க பாஜக முயற்சி செய்கிறார்கள்.

இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் வன்மையாக கண்டிக்கிறது. பாஜகவின் வன்முறை கலாச்சாரத்தை எதிர்த்து மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். தமிழக அரசு ஓரிரு வாரத்தில் கலையும் என கூறும் ஹெச்.ராஜாவின் பகல் கனவு பலிக்காது. வடஇந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதகமான சூழல் இல்லாததால் அவருக்கு தமிழகம் பசுமையாக தெரிகிறது. அவர் போட்டியிட்டால் நிச்சயம் தோல்வி அடைவார். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்