திமிங்கலத்தின் அம்பர் கிரீஸை தனிநபர் வைத்திருப்பது குற்றமா? - வனத்துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு 

By கி.மகாராஜன் 


மதுரை: திமிங்கலம் உமிழும் அம்பர் கிரீஸை தனிநபர் வைத்திருப்பது குற்றமா என வனத்துறை விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரை திமிங்கலத்தின் அம்பர் கிரீஸ் வைத்திருந்ததாக வனத்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தர்மராஜ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு: ''வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி அரிய உயிரினமான திமிங்கலம் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அந்த திமிங்கலம் வாய் வழியாக உமிழும் அம்பர் கிரீஸை ஒருவர் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா என்பது குறித்து அரசு தரப்பில் வனத்துறையிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. விசாரணை ஜூலை 26-க்கு ஒத்திவைக்கப்படுகிறது.'' இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்