மதுரை: மோசமான வானிலை காரணமாக பயணிகளுடன் 2 விமானங்கள் வானில் வட்டமடித்ததால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் சென்னை, ஹைதராபாத் விமானங்கள் வட்டமிட்டன.
ஹைதராபாத்தில் இருந்து 4:39 மணிக்கு பயணிகளுடன் கிளம்பிய இண்டிகோ விமானம் 6:10 மணிக்கு மதுரையில் தரையிறங்க வேண்டும். ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் தரையிறங்க முடியவில்லை. மாறாக மதுரை விமான நிலையத்துக்கு மேல் நீண்ட நேரமாக பயணிகளுடன் வட்டமடித்தது.
இதேபோல், சென்னையில் இருந்து 5:45 மணிக்கு புறப்பட்டு மதுரையில் 6:20 மணிக்கு தரை இறங்க வேண்டிய இண்டிகோ விமானமும் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்துக்கு மேல் நீண்ட நேரமாக பயணிகளுடன் வட்டமடித்தது. தொடர்ந்து அந்த விமானம் 7:15 மணிக்கு தரையிறங்கியது. 2 விமானங்களும் கிட்டத்தட்ட 40 நிமிடத்துக்கு மேலாக 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்தன.
» கரூர் | வீரணம்பட்டி பள்ளி குடிநீர் தொட்டியில் மர்ம திரவம் கலப்பு - எஸ்.பி., வட்டாட்சியர் ஆய்வு
» தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மழை, மேகம் தெளிவின்றி தரையிறங்குவதில் சிக்கல் இருந்ததால் 2 விமானங்களும் தரையிறங்காமல் வானை சுற்றி வட்டமிட்டன. இதன்பின் முதலில் சென்னை விமானம் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து ஹைதராபாத் விமானமும் தரையிறங்கியது. இது மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago