கோடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆக.1-ல் ஆர்ப்பாட்டம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கோடநாடு வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்குமாறு அரசை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் ஆக.1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017 ஏப்.24-ம் தேதி இரக்கமற்ற ஓர் அரக்கர் கூட்டம், அவர் மிகவும் நேசித்த வசிப்பிடமான கோடநாடு தோட்டத்துக்குள் புகுந்தனர். காவலாளி ஓம்பகதூரை கொன்று, கிருஷ்ணபகதூர் என்ற காவலாளியை காயப்படுத்தி, கொலை, கொள்ளையை நிகழ்த்தினர்.

தொடர் கொலைகள், மர்மங்கள்: இச்சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதாக சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கோடநாடு பங்களாவில் சிசிடிவி மற்றும் கணினி உள்ளிட்ட பொறுப்புகளை நிர்வகித்து வந்த தினேஷ், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை ஏற்பாடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சயான் என்பவரது மனைவி, மகள், இந்த குற்றம் நிகழ்ந்த காலத்தில் கோடநாடு சரக காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் உள்ளிட்ட பலரது சந்தேக மரணங்கள், மர்ம விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று, மொத்தமாக 6 உயிர்கள் பறிபோய் விட்டன.

இச்சம்பவங்கள் நடந்து 6 ஆண்டுகள் ஆகியும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த குற்றத்துக்கான நோக்கம் என்ன, இந்த வழக்கின் சூத்திரதாரி யார்? இந்த குற்றத்தை முன்னின்று நடத்திய கொடூரன் யார்? என்ற முடிச்சும் அவிழ்க்கப்படவில்லை.

அந்த கொடூர நிகழ்வில் தப்பித்து நேபாளத்துக்கு சென்ற கிருஷ்ணபகதூர் என்ற காவலாளியிடமும் போலீஸார் விசாரணை நடத்தவில்லை. ஜாமீனில் வெளியே வந்தவர்கள், ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் புலனாய்வு விசாரணையில் கூறியபோது, இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்ய ஒருவர் தங்களிடம் பேரம் பேசியதாக அவர்களது புகைப்படத்தை காட்டி அதிர்ச்சி தகவல் வெளியிட்ட னர். அதுபற்றியும் நடவடிக்கை இல்லை.

திமுக தேர்தல் வாக்குறுதி: ‘கோடநாடு சம்பவத்தில் குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டிப்போம்’ என்று, திமுக தேர்தல் அறிக்கையில் இன்றைய முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு காரணமான கிரிமினல் நபர்கள் தண்டிக்கப்படவும் இல்லை.

இந்த வழக்கில் திமுக அரசு கூடுதல் கவனம், முக்கியத்துவம் தராமல் இருப்பதை கண்டித்தும், இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் ஆக.1-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்