சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை மற்றும்பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர், தெலங்கானா ஆளுநர் மற்றும் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர், அழகுமுத்துக்கோனின் 266-ம் ஆண்டுகுருபூஜை விழா மற்றும் 313-வதுபிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி,சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பெரியகருப்பன், மு.பெ.சாமிநாதன், மாநகராட்சிமேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தென்சென்னை வடக்குமாவட்ட அதிமுக மாணவர் அணிசெயலாளர் ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்வை பழனிசாமி தொடங்கிவைத்தார்.
இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகளுடனும், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் சார்பில் விஜய்வசந்த் எம்பி, தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, பாமக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை செய்தனர்.
தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் நாசே.ஜெ.ராமச்சந்திரன், மாநில பொருளாளர் எத்திராஜ் யாதவ், தமிழ்நாடு யாதவர் பேரவைநிறுவனத் தலைவர் காந்தையா, தலைவர் ஜி.ஜி.கண்ணன், யாதவ மக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பிரசாத், அகிலஇந்திய யாதவ மகாசபை மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகர், அமமுக துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் யாதவ் உள்ளிட்டோரும் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “தமிழ் நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கும், தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாகவிளங்கும் மாவீரர் அழகு முத்துக்கோன். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அவரின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ்மங்காது ஒளிவீசும்” என்று கூறியுள்ளார்.
இதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago