சென்னை: தனக்கு எதிராக வருமான வரித் துறை தொடர்ந்துள்ள குற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் தாக்கல் செய்திருந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பி னரும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான டி.எம்.கதிர் ஆனந்த் கடந்த 2013-14 காலகட்டத்தில் வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை எனக் கூறி அவருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் பிறப்பித்தது. இதையடுத்து, அந்த ஆண்டுக்கான கணக்கை கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 29-ல் கதிர் ஆனந்த் தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்திருந்த கணக்கின்படி ரூ.1 கோடியே 4 லட்சத்து 94 ஆயிரத்து 60-ஐ வரியாக உரிய காலத்துக்குள் செலுத்தவில்லை என்பதற்காக அவர் மீது ஏன் குற்ற வழக்கு தொடரக்கூடாது என்பதற்கு விளக்கம் அளி்க்குமாறு வருமான வரித்துறை உதவி ஆணையர் கடந்த 2016 மார்ச் 11-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நோட்டிஸூக்கு கதிர் ஆனந்த் பதிலளிக்காத நிலையில், அவருக்கு எதிராக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் குற்ற வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கதிர் ஆனந்த் தரப்பில், ‘‘வருமான வரிக்கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றோ, வரிப்பணத்தை காலதாமதமாக செலுத்தினார் என்றோ அவர் மீது குற்ற வழக்கு தொடர முடியாது. வருமான வரித்துறை முதன்மை ஆணையரின் ஒப்புதலுடன் மனுதாரர் ஒட்டு மொத்த வரி தொகையையும் முழுமையாக செலுத்தி விட்டார். எனவே, சட்டத்தை தவறாக பயன்படுத்தி அவர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருமான வரித்துறை தரப்பில், ‘‘மனுதாரர் வருமான வரிக் கணக்கை மிகவும் காலதாமதமாக அதுவும் நோட்டீஸ் அனுப்பிய பிறகே தாக்கல் செய்துள்ளார். அந்த கணக்கை தாக்கல் செய்யும் போதுகூட அதற்கான வரியை செலுத்தவில்லை. ஓராண்டு காலதாமதமாகவே வரியை செலுத்தியுள்ளார். அவர் வேண்டும் என்றே இந்த காலதாமதத்தை உள்நோக்கத்துடன் செய்துள்ளார்,
அவர் காலதாமதம் செய்யவில்லை என்றால், அதை கீழமை நீதிமன் றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் நிரூபித்துக் கொள்ளட்டும்’’ என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘மனுதாரர் வேண்டுமென்றே வருமான வரிக்கணக்கை காலதாமதமாக தாக்கல் செய்தாரா? இல்லையா? என்பது குறித்தும், வரி தொகையை தாமதமாக செலுத்தினாரா? இல்லையா? என்பது குறித்தும் ஆதாரப்பூர்வமாக கீழமை நீதிமன்றம்தான் ஆராய்ந்து முடிவு எடுக்க முடியும்.
இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட முடி யாது. மனுதாரர் தனது தரப்பு நியாயங்களை கீழமை நீதிமன் றத்தில் தெரிவிக்கலாம்’’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago