தூத்துக்குடி, லூர்தம்மாள்புரம் ,அன்னை தெரசா மீனவர் காலனியை சேர்ந்த மோசையா மகன் சூசை(25). இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன், குடிவந்தார். இவர், குடியேறிய வீட்டின் வளாகத்தில் பாழடைந்த கிணறு இருந்தது. அதனை தூர்வார சூசை முடிவு செய்தார்.
கோவில்பிள்ளைவிளையை சேர்ந்த மாரியப்பன் (55), அன்னை தெரசா மீனவர் காலனி ததேயூஸ் (22) ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை தூர்வாரும் பணிக்கு ஆயத்த மாகினர். முதலில் கிணற்றினுள் இறங்கிய மாரியப்பன் திடீரென விஷவாயு தாக்கி மயங்கினார். அவரை மீட்கச் சென்ற ததேயூஸ் கூச்சல் போட்டபடி கிணற்றுக்குள் மயங்கினார். மாரியப்பனின் மகன் கலையரசன் (20) கிணற்றில் இறங்கினார். அவரும் விஷவாயு தாக்கி மயங்கினார். அவரைத் தொடர்ந்து அன்னை தெரசா மீனவர் காலனியை சேர்ந்த பீட்டர் (45) மற்றும் சூசை ஆகியோரும் அடுத்தடுத்து கிணற்றுக்குள் இறங்கி மயங்கினர்.
தூத்துக்குடி தீயணைப்பு படையினர் கவச உடையுடன் கிணற்றுக்குள் இறங்கி 5 பேரையும் மீட்டனர். இதில், மாரியப்பன், அவரது மகன் கலையரசன், பீட்டர் ஆகியோர் இறந்தனர். ததேயூஸ் மற்றும் சூசை ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago