கோவை: கோவை - சென்னை சென்ட்ரல் இடையிலான இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 4 நாட்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அரக்கோணம் - காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சித்தேரி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்பட்டுச் செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12680), வரும் 11, 18, 25 மற்றும் ஆகஸ்ட் 1-ம் தேதிகளில் (செவ்வாய்க் கிழமை) காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12679), வரும் 11, 18, 25 மற்றும் ஆகஸ்ட் 1-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் - காட்பாடி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை ரயில் நிலையம் வந்தடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago